ஹைக்கூ ராமாயணம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஹைக்கூ ராமாயணம்
(கதாபாத்திரங்கள் வாயிலாக)
(படைப்பு – நாகசுந்தரம்)
தசரதன்
வாக்கு கொடுத்தார்
ஒரு விரலுக்காக
இழந்தார் உடல் முழுவதும்
ராமன்
நாமமே காத்திடும்
ஆனால்
கையில் வில்
நாட்டை துறந்தான்
அனைவருக்கும் வருத்தம்
பாதுகையை தவிர
காட்டுக்கு அனுப்பினான் சீதையை
அவளுக்கு
காடு பிடிக்குமாம்
கைகேயி
மகனுக்காக
வரம் கேட்டாள்
கணவனை இழந்து
குகன்
கங்கை கடக்க உதவி
சிறிதுதான்
கிடைத்தது மேலான
இறைவனின் உறவு
பரதன்
தானே இறைவனாய் மாறினான்
முடிவு
பாதுகா பட்டாபிஷேகம்
இலக்குவன்
நாள் முழுதும் சேவை
உறக்கம் விடுமுறை கேட்டதாம்
சீதை
தோள் கண்டாள்
பார்வையின் உறுதி
அழிந்தனர் அரக்கர்
இறைவன் தந்தாலும்
எதுவும் வேண்டாதே
ஆசையின் விளைவு
சிறை வாசம்
தீயில் புகுந்தாள்
அக்னிக்கு
அக்னிப்பரிக்ஷை
மாரீசன்
போட்டது வேடம்
பொன்மானாய்
கெட்டது
தன்மானமாம்
சூர்ப்பனகை
மூக்கறுத்தான்
இலக்குவன்
மூச்சிழ்ந்ததோ
இராவணன்
ஜடாயு
நட்புக்கு தன்னையே தரலாம்
ஜடாயு மரணம்
சபரி
அன்புக்கு இறைவனும் அடிமை
சபரியின் எச்சில்
ஹனுமார்
சாதனை செய்ய எண்ணிவிட்டால்
கடல் கூட கடுகுதான்
சுந்தர காண்டம்
கண்டேன் சீதையை
இராமனை காத்த
ஹைக்கூ
சிவ சிவ என்றான் இராவணன்
இராம இராம என்றான் அனுமன்
அதிகாரி பேதம்
அசோக வனத்தில்
உயிர் விட துணிந்தாள் சீதை
ஆம்புலன்ஸ் அனுமன்
ராமனுக்கு வரைந்தாள் மடல்
மின்னஞ்சல் முகவரி
கணையாழி
சுக்ரீவன்
மறைந்து மறைந்து வாழ்க்கை
வாலி எனும் உயிர்கொல்லி
மருந்து இராம பாணம்
வாலி
விழைந்ததோ பிறன் மனை
மாலையிட்டதோ மரணத்திற்கு
எதிர் விளைவு
லங்கிணி
இலங்கை நுழைவாயிலில்
அனுமன் உடலை ஸ்கேன் செய்தாள்
செக்யுரிட்டி செக்
விபீஷணன்
தீய உறவின் பாலம் தகர்த்தான்
இறைவன் பாலம் போட்டு வந்தான்
மறுமலர்ச்சி
அடைந்தான் சரணாகதி
இறைவனின் பெருமைக்கு
இன்னுமொரு சாக்ஷி
தனயனுக்கு இராமன் கையால் பாணம்
இவனுக்கோ இராமன் கையால் மகுடம்
பாகப்ரிவினை
கும்பகர்ணன்
இலக்குவன் தந்த விடுமுறையில்
கும்பகர்ணனுக்கு உறக்கம் ஓவர் டைம்
இந்த்ரஜித் (மேகநாதன்)
தந்தையாய் இருந்தாலும்
தீயதற்கு துணை போனான்
காத்திட வில்லை
நிகும்பலை
இராவணன்
குலம் அழிந்தாலும்
கோபம் அழியவில்லை
பகைமையால்
போனது சிகை
இன்று போய் நாளை வா
என்றான் இராமன்
போனது அவன் மட்டும் இல்லை
மானமும்தான்
பத்து தலை இருந்தாலும்
மித்தம் இல்லை
கருணைகொலை இராமனால்
பிறன்மனை விழைந்தால்
உறவும் போய்விடும்
இராவணன் தனிமை
காமம் இரு கண்ணால்
பார்க்க முடியாமல் போனது
இருபது கண்களால்
இலவன் குசன்
இராம என்ற இரண்டேழுத்தின்
இரட்டை கிளவி
சீதை தனிமையில்
படிக்கும்
இராமாயணம்
வான்மீயின்
இராமயண காவியம்
உண்மையானது
ஓர் லவத்தில்
இராமாயணம்
காவியமோ மரபுக்கவிதை
இராமனை பற்றி
ஒளிர்ந்ததோ
இராம நாமம் என்னும்
ஹைக்கூ