தொடரி

நெடுந்தூரப் பயணத்தை இனிதாக ஆக்கும்
குழந்தைக்கும் முதுமைக்கும் பாதுகாப்பு கவசம்
இரவினில் இசையுடனே தாலாட்டு இசைக்கும்
வழியெங்கும் புதுமுகங்கள் அறிமுகப் படுத்தும்
மலைமீதும் குகைக்குள்ளும் பயமின்றிச் செல்லும்
மனதிடத்தை மனிதருக்கும் கற்றுக் கொடுக்கும்
ஆற்றின்மீதும் கடலின்மீதும் ஊர்ந்துசெல்லும் போது
நீலவண்ணம் மனம்முழுதும் இழைத்துவிட்டுப் போகும்
நகரத்தினில் பொதிசுமக்கும் கழுதைக்குச் சமமாய்
மெட்ரோவாய் தலைமீது ஊர்ந்துசெல்லும் பேனாய்
கிராமத்து மக்களுக்கு இன்றும்கூடக் கனவாய்
வெகுதூரப் பயணிகளின் நீங்காத துணையாய்
ஊர்விட்டு ஊர்சென்றும் மாறாது குணத்தில்
எம்மதமும் சம்மதமே பிரிவில்லை மனதில்
ஓய்வின்றி உழைத்திருக்கும் அழகான ஒயிலே
தொய்வின்றி நீவாழ்வாய் மனங்கவர்ந்த ரயிலே