உறவுகள்

உறவுகள்
இப்போதெனக்கு
அந்நியமாகவேபட்டன
முன்பை விட
இப்போது நான்
உறவுகளை விட்டு
கொஞ்சம் விலகியேயிருக்கிறேன்
“போனா தூக்க
நாலு பேராவது வேணும்”
என்பாள் அம்மா
அந்த
நான்குபேருக்காகத்தானா
நமது உறவுகள்?
அந்த நான்குபேரை மட்டும்
இப்போது நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்!