miss u அப்பா

என் தந்தையே உந்தன்
பிரிவு என்னை வாட்டுகிறது
ஒவ்வொரு எனது பிறந்த
தினம் நெருங்கும் நேரமும்
உன் பிரிவுதான் நினைவில்
வருகிறது அப்பா ...

தந்தையில்லா மகள்
மட்டுமில்லை அப்பா நான்
என் தாயின் பெண்மைக்கு
தாய்மை கொடுத்தவள்
நான் ஆனா என் தாயோ
என்னில் பாசமில்லா
ஒருவராய் ...நான் யாருமில்லா
அநாதையாகிவிட்டேன் அப்பா ...

உண்ண உணவிருந்தும் உண்ண
மனமின்றி என் பொழுதுகள்
பசிக்கும் நேரம் பிரச்சனைகள்
வந்து நெஞ்சில் முட்டி வாயை
அடைக்கிறது அப்பா .....

என் பிள்ளை என் கணவரை
அப்பா என்று அழைக்கும் போதெல்லாம்
நெஞ்சு குமுறுது அப்பா
நான் உங்களை அப்பா என்று
அழைக்கும் வரம் பெறவில்லையே
என்று அப்பா

புது வீடு கட்டும் ஆரவாரத்தில்
எல்லோரும் இங்கே அப்பா
எனக்கோ என் சார்பில் சொந்தம்
என்று சொல்ல யாரும் இல்லை
உங்கள் தங்கையை தவிர .....

என்னை அநாதையாக்கி செல்லவா
எனக்கு உயிர் கொடுத்தீங்க
அப்பா ..26 வருடமாகிறது
நீங்க காணாமல் போய்
கயவர் செயலால் என் கண்ணில்
கண்ணீர் ..என் நெஞ்சில்
துன்பம் .........
i miss u appa
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (18-Jun-11, 7:34 am)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 728

மேலே