சலசா, கிரிசா சொய்யான்

ஏண்டி சலசா, கிரிசா சொய்யான் ரண்டுபேரும் எங்கடி?
=
பாட்டி எம் பேரு ஜலஜா, எந் தங்கச்சி பேரு கிரிஜா, எங்க தம்பி

பேரு ஷ்யாம். ஏம் பாட்டி எங்க பேர தப்புத் தப்பாச் சொல்லி

அசிங்கப்படுத்தறீங்க?

----
ஏண்டி பேத்தி எம் பேரப் பிள்ளைங்களுக்கு வாயில் நொழைய

பேருங்கள வச்சிருக்காங்க. நா உங்க பேருங்களச் சரியா

சொல்லறதில்லன்னு சொல்லறீங்களே, மொதல்ல உங்க மூணு

பேரோட பேருங்களுக்கும் அர்த்தம் சொல்லு பாக்கலாம்.
----

பாட்டி ஜலஜா-ன்னா தாமரை. கிரி-ன்ன மலை. கிரிஜா-ன்னா

மலைமகள், ஷ்யாம்-ன்னா கருப்பையா.

-------

ஏண்டி சலசாங்கறதவிட தாமரை அழகான தமிழ்ப் பேரு.

கிரிசாவைவிட மலைமகள்ன்னு சொல்லறதும் அருமையான

தமிழப் பேரு. சொய்யாங்கிறதவிட கருப்பையா நம்ம

குலதெய்வத்தின் பேரு. ஏண்டி நம்ம தாய்மொழில இல்லாத

அழகான பேரா வேற மொழிகள்ல இருக்கப் போகுது? உங்க

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் புத்தி கெட்டுப் போச்சா இது மாதிரி

வாயில நொழையாத பேருங்கள உங்க மூணு பேருக்கும்

வச்சிருக்காங்க?

------

இல்ல பாட்டி இப்ப பட்டிகாடு மலைக் கிராமங்களில கூட

சினிமா வெறிலெ பெத்த பிள்ளைகளுங்களுக்கு இந்திப் பேர

வைக்கறது தான் நாகரிகம்.
--------
நாசமாப் போச்சு. நீங்கெல்லாம் என்ன படிப்புப் படிச்சீங்களோ.

தாய் மொழியும் தாயும் ஒண்ணுன்னு உங்களுக்கெல்லாம்

தெரியாதா? ஏண்டி சாமிகிட்ட வேண்டிக்கற போது நம்ம

தாய் மொழிலெ தானெ வேண்டிக்கிறோம். யாராவது அடிச்சாக்

கூட “அய்யோ அம்மா”ன்னு தாண்டி கத்தறோம். ஆபத்திலெ

மாட்டிட்டா ”அய்யோ என்ன யாராவது காப்பாதுங்கோ” -ன்னு

தானே கத்தறோம். கிய்யா குய்யா நொய்யான்னா கத்தறோம்?
==
நாங்க என்ன செய்யறது பாட்டி. எங்கிட்டச் சொன்னத எங்க அம்மா அப்பா, அதாவது உங்க மகனும் மருமகளும் வீட்டுக்கு வந்ததக்கப்பறம் அவுங்கிட்டச் சொல்லுங்க.
--------------------
மீள் பதிவு
===========================================================
மொழிப் பற்றை வளர்க்கவும் மொழி சார்ந்த இனப்பற்றை வளர்க்கவும், பிற மொழிப் பெயர்களின் பொருள் அறியவும்.
====================.
பெரும்பாலான இந்தியர்களால் பேசப்படும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே என்பதில் பெருமை கொள்வோம்.
==============================================

எழுதியவர் : மலர் (2-Apr-16, 7:43 pm)
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே