வண்ணமயிலே

காக்கைக்கு காதல் வந்ததடி
வண்ணமயிலே
வண்ணம் தீட்டிட வருவாயோ
குடிபுகுந்து வீட்டினிலே..
தோகை விரித்தாடிடும்
செல்ல மயிலே
கெஞ்சிட மிஞ்சுவாயோ
சொல் மயிலே..
பலர்மனம் கவர்ந்த
நீல மயிலே
மனம் பரிகொடுத்து
தவிக்கிறேன் கனவினிலே..
சிறகு விரித்து பறப்பதேனடி
சிறகிருந்தும் என்கருமை தடுக்குதடி..
காக்கைக்கு தன்இனம் பொன்இனம்
நீ வந்தால் நானாவேன் மயிலினம்..
தவிக்க விட்டு செல்லாதே
கடுகளவும் மனது தாங்காதே..
இனி சிறகும் விரிக்காதே
தோகை விரித்து விழியோரம்
மழையையும் வர வைக்காதே..
-செந்தமிழ் நாகராஜ்