கோபம்
கோபம்...
அது அதீத உணர்வின்
வெளிப்பாடு.
உரிமை மீறலின்
தாக்கீடு.
ஆக்கிரமிப்பின்
எச்சம்.
அகங்காரத்தின்
மிச்சம்.
கோபம்
இருக்கும் இடத்தில்
குணம் இருக்கும்.
குணம்
இருக்கும் இடத்தில்
அன்பிருக்கும்.
புரிந்து கொண்டால்
கோபம் கூட
அர்த்தம் உள்ளதாய் தெரியும்.
புரியவில்லை என்றால்
அன்பு கூட
அர்த்தம் அற்றதாய் தெரியும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
