கடவுள்

கடவுளுடன்
நானும் காத்திருந்தேன்,
பூஜை செய்கின்ற அர்ச்சகர் வருகைக்காக.

குடிநீர் பாட்டிலில்
நீர் நிரப்பி எடுத்து வந்தார்
அங்கே பணிபுரியும் ஒர் கடை நிலை ஊழியை

உள்ளே எட்டி பார்த்து
'சாமி சாமி' என்று குரல் கொடுத்தார்.
அவரும் அர்ச்சகரையே தேடி வந்திருப்பார் போலும்.

பதில் வராது போகவே,
யாரும் இல்லை போல என்றபடி
தனக்கு தானே பதிலறுத்தவாறு கிளம்பினார்.

உள்ளே தான் இருக்கிறார் 'சாமி'
என்றவாறு கடவுளை நோக்கி
கை நீட்டினேன்

திடுக்கிட்டவாறே திரும்பி நின்று
யோசித்தார்.
ஏதேனும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்;
வெகுளியாய் சிரித்துவிட்டு போய் விட்டார் .

கடவுளிடம் வரம் வேண்டி
வருபவர்களிடம்
கடவுள் இல்லை என்று
அழுத்தமான நம்பிக்கை
இருப்பதேன்..?

எழுதியவர் : செல்வமணி (3-Apr-16, 10:30 am)
Tanglish : kadavul
பார்வை : 136

மேலே