குடையெனக் கவிழும் குளிர் நிழல் அருளும்

குடையெனக் கவிழும்
குளிர் நிழல் அருளும்.

மடையெனத் தென்றல்
திறந்து…
மனிதரின் மேல் பட்டு
உருளும்!.

மரகத வதனம்.
மழை முகில்..
தரணும்.

பறவைகள் இசை கேட்டு
‘பலே’ என்று
சிலாகித்து
இலைகரம் தட்டி
மகிழும்.

கனியென்ற
அமுதம்
ஒரு குழந்தையினைப் போல..
இதன் கிளைகளில்
ஊஞ்சலிட்டுப்
பழகும்.


வீடென்ற சதுரம்
உயர..
மரமன்றோ உதவும்!.

மரமில்லா ஊரில்
மனிதம் எப்படி
நிலவும்..?

மரமில்லா உலகில்
உயிர்கள்
எப்படி
உலவும்.?

எழுதியவர் : பரதகவி (4-Apr-16, 1:30 pm)
பார்வை : 108

மேலே