புயல் கடந்த கடற்கரை

தூண்டிலில் மீனின்
துடிப்பு
வாழ்வா சாவா
என்ற போராட்டம் !

உதிந்த மலர்களின்
சிரிப்பு
இன்னும் தொடரும்
வாழ்வின் களிப்பு !

எண்ணை தீர்ந்த
விளக்கின் ஒளி
காற்றும் தொட்டிடத்
தயங்குது !

புயல் கடந்த
கடற்கரை
அமைதி தழுவிய
அலைகள் !

தேயும் நிலவு
வானில்
இன்னும் அழகு
கவிதையில் !

மறந்து விட்ட
உன் காதலில்
நினைவுகளுக்கு
நித்திய வாசம்
கவிதையில் கண்ணீரில்
வார்த்தைகளற்ற
மௌனத்தில் ....
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-16, 11:34 am)
பார்வை : 132

மேலே