உதிர்ந்து போன காதல்

உதிர்ந்து போன காதல்

புல்லின்மீது படரும்
ஒற்றை பனித்துளி

பூவின்மீது அமரும்
அந்த வண்ணத்துப்பூச்சி

குழந்தையை சிலிர்ப்பூட்டும்
முதல் மழைத்தூரல்

அன்னையின் கன்னம் வருடும்
மழலையின் விரல்கள்

மல்லிகை மணம் சுமந்து
வரும் தென்றல்

மென்மை கனவுகள் சமைத்து
கனிந்த பெண்மையுடன்
காத்திருந்த என் காதல்

உன் தவறான சந்தேக
எண்ணங்களில் உருவாகி
என் இதயம் எரித்த
அந்த 'ஒற்றை வார்த்தை' யில்

உருவம் குலைந்து
உதிர்ந்து போனது

எழுதியவர் : சூரியகாந்தி (4-Apr-16, 11:36 pm)
பார்வை : 494

மேலே