இந்த வார பாக்யா வார இதழ் படத்திற்கு கவிதையின் கரு கவிதைகள் கவிஞர் இரா இரவி

இந்த வார பாக்யா வார இதழ் படத்திற்கு
கவிதையின் கரு கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
--------------------
ஒருவன் உயிர் ஊசலாடுகிறது !
ஒய்யாரமாக ஊஞ்சலாடுகின்றாள் !
--------------------------------
பாரம் இழுப்பவர்கள்
கோபம் கொண்டால்
இப்படித்தான் !
-----------------------
முதுகைக் காட்டினால்
குதிரையும் குதிரை
சவ்வாரி செய்யும் !
------------------------
கன்னியைக் காதலித்து
ஏமாற்றுவோருக்கு
இதுதான் தண்டனையோ ?
------------------------------
மலர் ஊஞ்சலில்
மங்கையின் ஆட்டம்
வாலிபர்களின் நோட்டம் !
------------------------------------
செலவின்றிச் சிந்திடும் புன்னகை
வரவாகும் வரவேற்பு !
--------------------------
யாரும் தள்ளி விடாமலே ஆடும் ஊஞ்சல்
காற்றுக்கும் காதலோ ?
தள்ளி விடுகின்றதோ ?
----------------------------
ஊஞ்சலாடும் ஒய்யாரி மேலே
குதிரையின் சவ்வாரி கீழே !