ஏண்ணே இப்பிடி கரண் கிரண்

======================================

அண்ணே நா அமெரிக்காவிலெ இருந்து வந்திட்டேன். இங்கயே ஒரு தொழில் தொடங்கி ஒரு நூறு பேருக்காவது வேலை தரணுங்கறது என்னோட ஆசை.
==
நல்லதுடா தம்பி,
==
சரி, அண்ணியும் உங்க கொழந்தைகளும் எங்க போயிருக்காங்க?
==
உன்னோட அண்ணி கரண் –னையும் , கிரண் –னையும் கோயிலுக்குக் கூட்டிட்டு போயிருக்காங்க.
==

கொழந்தைங்களுக்கு கரண், கிரண் –ன்னு இந்திப் பேருங்களையா வச்சிருக்கீங்க? வீட்டிலே எல்லோரும் ’இந்தி’லயா பேசறீங்க> ஏண்ணே இந்திக்காரங்க நம்ம உங்க கொழந்தைங்க பேரக் கேட்டா நம்மளக் கேவலாம நெனைக்கமாட்டாங்க?
==
என்னடா சொல்லற?
===
அண்ணே இந்தி ஒரு கலப்பட மொழி. பாரசீக மொழியும் சமஸ்கிருத மொழியும் கலந்த ஒரு கலவை தான் இந்தி. அதனால இந்தி தெரிஞ்சவங்களுக்கு 75% உருது புரியும். நம்ம மொழி உலகின் முதன் மொழின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லறாங்க. இப்படிப்பட்ட செம்மொழி நம் தாய் மொழியா இருக்கறத நெனச்சு நாமெல்லாம் பெருமைப்படலாம். வளமான நம்ம செம்மொழியிலே பிள்ளைங்களுக்கு பேரு வைக்க அழகான பெயர்ச் சொற்களா இல்ல?
===
என்னடா செய்யறது தம்பி? தமிழர்களிலெ பெரும்பாலோர் சினிமா மோகத்திலே 95% பிள்ளைகங்களுக்கு இந்திப் பேருங்களத் தான் வைக்கறாங்க. ’ஊரோடு ஒத்து வாழ்’ங்கற பழமொழிக்கேற்ப நானும் எம் பையனுக்கு கரண் –ன்னும் பொண்ணுக்குக் கிரண் –ன்னும் பேரு வச்சிட்டேன்.
====
சரி, சரி. உங்களக் கொற சொல்லிப் புண்ணியம் இல்ல அண்ணே. சினிமா வந்த நாள்லெ இருந்து தமிழ் மொழி பண்பாடு எல்லாம் சீரழிஞ்சுட்டு வருது. அரசியல்வாதிகள் மொழிப் பற்றும், மொழி சார்ந்த இனப்பற்றும் உள்ளவங்களா மாறினாத்தான் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் காப்பாத்த முடியும்.
=============================================================================
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
=============================================================================
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
करण = the 'doer', that is, someone who does the work pretty கரண்
किरण = The name Kiran is a baby girl name; the meaning of the name Kiran is: A beam of light.கிரண்

எழுதியவர் : (5-Apr-16, 9:45 pm)
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே