பூனைக் குறும்பு
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத் திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!!
*