இருந்து என்ன பயன்
அடுத்தவரின் தனிமையை
மறுத்து நுழைக்கும் நீண்ட
மூக்கும்
அடுத்தவரின் உயர்வை
பொறாமையில் பார்க்கும்
கண்ணும்
அடுத்தவரின் இயலாமை
கண்டு எள்ளி நகைக்கும்
உதடும்
அடுத்தவரின் இல்லாமை
கண்டும் சுருங்கும்
கையும்
அடுத்தவரின் துயர் கண்டும்
ஓடி உதவாத
காலும்
அடுத்தவரின் இழப்பில்
தானும் வருந்தாத
இதயமும்
அடுத்தவரின் புகழை
கேட்க துணிவில்லா
காதும்
அடுத்தவரை உயிராய்
ஏற்க தயங்குகிற
மனமும்
இருந்துதான் என்ன பயன்?