வாழ்வோம் வா 2

வாழ்வோம் வா 2

இறந்த காலத்தை
ஏன் சுமந்துகொண்டு நடக்கின்றாய்

நிகழ்காலம்
அது எதிர்காலத்தின் ஏணி

உச்சத்தில்
நின்று நோக்கினால்தான்
உலகின்
பிரம்மாண்டம் தெரியும்

அறிவின்
ஆழத்திற்கு செல்
மனதின்
போராட்டத்தை நிறுத்து

மூன்று காலங்களை
உணர்ந்துகொள்

எதிர்ப்பார்புகளை எரித்துவிட்டு
எதுவரினும்
எளிதாக ஏற்றுக்கொள்

வசந்தம் வரும்
வாழ்வோம் வா

எழுதியவர் : சூரியகாந்தி (8-Apr-16, 6:49 am)
பார்வை : 285

மேலே