வாக்கு உன் செல்வாக்கு
வாக்கு உன் செல்வாக்கு
அதற்கு கொடு மதிப்பு
வாக்குக்கு பேரம் பேசினால்
உனக்கு கிடைக்கும் மிதிப்பு
வாக்கு பின்னாலே அலைவர்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறையே
வாக்கு கிடைத்ததும் மறைவர்
சொத்து சேர்த்திட தலைமுறைக்கே
நிற்கும் நாலைந்து பேரில்
சிறிதாய் தப்பு செய்தவரை
தேட உன்னால் முடியுமென்றால்
அவருக்கே வாக்களி முடிந்தவரை
வாக்கின் மதிப்பை உணர்ந்திட்டால்
வாழ்நாள் உனக்கு பொக்கிஷமே
வாக்கை தப்பாய் பயன்படுத்த
வரும் பலனெல்லாம் ஒருவிஷமே
ஐந்து வருடத்திற்கு ஒருமுறைபூக்கும்
வாக்கும் சிறு குறிஞ்சிபூதானோ
வாக்கென்ற சொத்திற்கு மதிப்பளிப்போம்
தேர்தலில் நிச்சயம் வாக்களிப்போம்