வெண்ணிலவைக் குடித்தேன்

படம் பார்த்து வடித்த கவிதை (அமுதசுரபி)
====================>>>=================
வெண்ணிலவைக் குடித்தேன்..!
எட்ட நின்று வெண்ணிலவை ரசித்தேன்
கைதொட்டுவிட கலங்குது துடித்தேன்..
அள்ளிக் கையில் அந்நிலவை எடுத்தேன்
ஆசை தீர வெண்ணிலவைக் குடித்தேன்..!!
அள்ள அள்ளக் குறையாத நிலவு - கையில்
உள்ளபோது கொள்ளை கொள்ளை அழகு
சொட்டு சொட்டாய் கையை விட்டு நழுவும்
மண்ணில் கொட்டிவிட்டால் காணாது மறையும் ..!!
கை பட்டாலே சிலிர்த்திடும் நிலவை
கன்னம்தொட்டு விளையாடி களிப்பேன்
விரட்டிட வரும் அந்த பரிதி - கண்டு
கோபத்தில் நானும் அதை சபிப்பேன்..!!