என் தந்தை
என்னை படைத்தவர்,
என் பாதை தொடுத்தவர்.,
மண்ணை பியர்த்தெடுத்து மகசூல் கொடுத்தவர் ,என் கண்ணை கன நொடிகள் கலங்காமல் தடுத்தவர்.,
தாயின் பாசம்தனை தவறாமல் பெறுபவன், தந்தையின் பாசத்துக்காக ஏங்கி ஏங்கி தவித்தவன் நான்..
நா சுழற்றி சத்தமிட்டு, ஆரிரோ பாடல் பாடி, முத்தத்தால் கண்ணீர் துடைக்க முந்துபவள் தாய் என்றால் .,
மூச்சிறைக்க கத்தும் சத்தம் முனு முனுப்பாய் நின்றுவிட, உதட்டளவில் அதட்டும் உன் அன்பினை என்ன சொல்ல...
எனக்காக வெளிப்படும் உன் கோவம் கூட அன்புதானே....
புத்தகத்தில் தேடல்களை அதிகம் புரட்டாமலேயே நிறுத்திவிட்டு, உன் அறிவுத்தாகத்தை அனுபவத்தில் சேர்க்க துவங்கினாய் நம் வயல் வெளிகளில்.
உன் வியர்வையில் மலரும் வரம் பெற்று வந்ததாள்தான், வளமாய் தழைக்கிறதோ நம் வயல்வெளியெல்லாம்...
நுகத்தடியில் மாட்டைப் பூட்டி, கலப்பைதனை கையில் ஏந்தி,விடியுமுன்னே புரப்படுவாய்.,
சூரியனும் காலை விழித்திட மரந்திருக்கும்,
காய்ந்த மண்ணை கலப்பை ஊன்றி நீ புரட்டும் வரை.
நீ வீசிய நெல் மணிகள் நாற்றாகி,
எடுத்து வைத்த நாற்றுகள் பயிராகி,
பசுமையாய் செழுமையாய்
வளர்ந்து,
முதிர்ந்த நெற்கள் காற்றில்
உரசும் சத்தம் கேட்டு உள்ளிருந்து ஒரு புன்னகை பூப்பாய்,ஒரு விவசாயியாய் பெருமை கொள்வாய்...
விடுமுறை நாள் தவிர வேறென்றும் விரும்பி நீ அழைத்ததில்லை எங்களை, உன்னைபோல் சேற்றில் இரங்க.
சுட்டெரிக்கும் வெயில் உனக்கு,
மரத்தடி நிழல் எனக்கு,
நித்தம் ஒரு ஆடை எனக்கு,
பண்டிகை நாள் போதும் உனக்கு.
உனக்கென்று தனி நேரமின்றி,
எங்களுக்காய் உழைத்தது போதும்.,
பிறர்க்காக வாழ்வதை உன்னிடம் இருந்து கற்றுக்கொண்டேன், இன்று உன் பிறிவின் வேதனைகளை தனிமையில் ஒப்புக்கொண்டேன்..
தத்துவமாய் நீ தந்த வார்த்தைகள் போதும், தத்தளிக்காமல் நீந்த இவ்வாழ்க்கையை எனக்கு...