ஆண விட பெண்கள் ஒட்டு தமிழ்நாட்டுல அதிகம்,பெண்கள் நீங்கள் நினைச்சிபுட்டா நடக்காததும் நடக்கும், மதுவ ஒழிக்கும் கட்சிதான் என்றும் நம்மள ஆள முடியும்
குடிச்சி குடிச்சி குடிய கெடுத்து வீணாக்கும் சாராயம்!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் எட்டி உதைக்கும் சாராயம்!
சொன்னதையே சொல்ல வச்சி மாயம் செய்யும் சாராயம்!
கூடி கூடி குடிக்குற குழந்த குட்டிய மறக்குற
சம்பளத்த கரைசிப்புட்டு நடுத்தெருவுல நிக்குற
குடிச்சி குடிச்சி குடிய கெடுக்கும் மது எதுக்கு நண்பா!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் அது எட்டி உதைக்கும் நண்பா!
பணக்காரன் குடிக்குறான் மேலும் பணக்காரன் ஆகுறான்,
பாட்டாளி குடிக்குறான் பாதி ஆயுசுல சாகுறான்.
குடிச்சி குடிச்சி குடிய கெடுக்கும் மது எதுக்கு நண்பா!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் அது எட்டி உதைக்கும் நண்பா!
குடியால குடும்பம் கெட்டு தத்தளிக்குது தமிழகம்,
பண்பாடு கலாச்சாரம் மறக்க வைக்குது சாராயம்,
ஓட்டு போட சாராயம் கூட்டம் கூட்ட வைக்குது சாராயம்,
போலிச பாத்துபுட்டா பதற வைக்கும் சாராயம்,
பெருங்காயம்,சிறுங்காயம் உண்டாக்கிபுடும் சாராயம்
குடிச்சி குடிச்சி குடிய கெடுக்கும் மது எதுக்கு நண்பா!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் அது எட்டி உதைக்கும் நண்பா!
உன்ன படிச்ச ஆண்டவன் உன்ன ஊனமில்லாம படைச்சான்,
நீ படைச்ச பிள்ளைங்க உன்னால மானங்கெட்டு வாழுது,
குடிச்சி குடிச்சி உன் தேகம் வீணாகுது அதனால சந்தேகமெலாம் தோணுது.
குடிச்சி குடிச்சி குடிய கெடுக்கும் மது எதுக்கு நண்பா!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் அது எட்டி உதைக்கும் நண்பா!
சிங்கமாக நடந்தவன் பாம்பாக நெளியுறான்,
காத்துலயே கப்பல் விட்டு தண்ணியில படம் வரையுறான்
குடிச்சி குடிச்சி குடிய கெடுக்கும் மது நமக்கு வேணுமா!
வளர கிடைக்கும் வாய்பெல்லாம் எட்டி உதைக்க போறோமா!
ஆண விட பெண்கள் ஒட்டு தமிழ்நாட்டுல அதிகம்,
குடிக்காத ஆண்கள் ஓட்டும் மதுவுக்கு எதிராக அமையும்,
பெண்கள் நீங்கள் நினைச்சிபுட்டா நடக்காததும் நடக்கும்,
மதுவ ஒழிக்கும் கட்சிதான் என்றும் நம்மள ஆள முடியும்...