கண்ணனின் ராதை

வசந்தத் தென்றல்
இதழ்வழி வெளிப்பட்டு
குழல் வாசல் வழி நுழைய
கண்ணன் விரல்கள் தடவிட
ஏதோ ஒரு ராகம் ஏதோ ஒரு கீதம்
வேய்ங்குழல் ஆலாபனை செய்திட
மான்களும் மயில்களும் மாடுகளும்
வந்தமர்ந்தன மயங்கி
ராதையும் வந்தமர்ந்தாள்
காதலில்...
~~~கல்பனா பாரதி~~~