பச்சை முண்டாசு தாத்தா

பச்சை முண்டாசு தாத்தா

என் பெயர் சரவணன். 11 ஆம் வகுப்பு மாணவன். இரண்டு ஆண்டுகள் தீவிர படிப்பு இருக்குமாகையால் நாங்கள் பள்ளிக்கு அருகே புதியதாக வீடு மாறினோம். என் அப்பா மாநில போக்குவரத்து துறையில் மேலாளர் அம்மா வீட்டின் மேலாளர்.

புது வீடு பிடித்திருந்தது எனக்கு அதை விட வீட்டின் அந்த ஜன்னல் மிகவும் பிடித்திருந்தது., தெரு முழுவதும் பார்க்க முடியும். தெரு நோக்கி இருக்கும் அறை என்னுடையது.

எதிர் கட்டிடிடம் ஒரு விடுதி. ஜி கே யூத் ஹாஸ்டல் “. எப்போதும் யாரோ வருவதும் போவதும் எப்போதும் ஜே ஜே என்று இருந்தது. என் டியூஷன் வகுப்பும் அடுத்த தெரு தான். என் பள்ளிக்கு அப்பா ஒரு ஆட்டோ வைத்தார். ஒரே நாளில் ஆட்டோ நண்பர்கள் ஏழு பேர் கிடைத்தார்கள்.

இன்று ஞாயிறு என்பதால் ஏழு மணிக்கே எழுந்தேன். எழுந்ததும் ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்த்தேன்....விடுதி அதை சுற்றி மரங்கள்....மற்ற நாட்களை போலல்லாமல் இன்று நிசப்தமாகவே இருந்தது. என்றாலும் அதுவும் ஒரு அழகான அமைதி.

அதற்குள் அம்மா வந்தாள்...
"எழுந்திட்டியா, கடைக்கு போய் ஒரு தேங்காய் வாங்கினு வாப்பா.... அப்பா குளிக்கராறு. சட்னிக்கு வேணும்".

பல் துலக்கி முகம் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் காசு வாங்கிக்கொண்டு தெருவில் நடந்தேன். அந்த தெருவில் நிறையவே மரங்கள்...அடுக்கு மாடி வீடுகள் நிறைய இருந்தாலும் ஓரிரு தனி வீடுகளும் இருந்தன. தெருவின் கடைசியில் ஒரு வீட்டில் ஒரு நாய்
வெள்ளையாய் புசுபுசுன்னு பௌபோவ் என்றது. அதையும் ரசித்தேன்....ஏக்கமாய் பார்த்தேன். 12 ஆம் வகுப்பு முடிந்ததும் நாய்க்குட்டி ஒன்று வாங்கி தருவதாக அப்பா சொல்லியிருக்கிறார். தேங்காயை வாங்கிகொண்டு வீடு வந்தேன்.

குளித்து இட்லி சட்னி சாப்பிட்டு விட்டு வீட்டுபாடத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். கணக்கு அறிவியல் என்று முடிப்பதற்க்குள் 12.30 ஆனது. ஒரு மாறுதலுக்காக ஜன்னலோரம் வந்து நின்றேன்.

நேற்று ஆட்டோவில் வரும்போது பார்த்த அதே தாத்தா தலையில் பச்சை நிற முண்டாசு, பத்தடி நடக்க பத்து நிமிடங்கள் ஆனது. கையில் ஒரு தடி கொண்டு மெதுவாக நடக்கிறார். அழுக்கு சட்டை அதைவிட அழுக்கான வேட்டி தலையில் பச்சை முண்டாசு தோளில் ஒரு பை....அதில் ஒன்னும் இருப்பதாக தெரியவில்லை....லேசாகவே தென்பட்டது....எண்பது வயதிருக்கும்.....நடந்து வந்து அந்த விடுதிக்குள் நுழைந்தார். படிக்கட்டுகளிலேயே உட்கார்ந்து கொண்டார். வருவோரும் போவோரும் யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை.

பழகிய ஆளாக இருந்தார்...யாரோ ஒருவன் சலாம் போட்டான், தாத்தா மெல்லியதாக சிரித்தார். ஏழ்மையில் இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு அமைதி பிரகாசமாக இருந்தது. எங்கோ பார்த்த சாது.. யோகி.. சாமியார்.. முக ஜாடை இருந்தது.
அதற்குள் அம்மா, “ சரவணா வந்து சாப்டுட்டு போய் படி, என்றாள்”.
தொடரும்..........

எழுதியவர் : சுபா சுந்தர் (11-Apr-16, 12:33 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 133

மேலே