ஓமனபெண்ணே-7
ஓமனபெண்ணே.....7
உன்னோடு வாழ
ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது
இப்போது கேட்கிறாய் நீ யாரென்று...
போய் உன் இதய கண்ணாடியை
திறந்து பார்...
அப்போது புரியும்
அதை களவாடியவன்
நான் தான் என்று....
"ஹலோ நான் நிந்தியா பேசறேன்"....
........................
" மோகன், ஆர் யு தேர்..."
அவளோட குரல கேட்டதும் என்னோட ஒட்டு மொத்த பிரச்சனைகளும் ஒரே அடியா பறந்து போன மாதிரி ஒரு சந்தோசம்....
என்ன பதில் பேசறதுனே தெரியல...மனசு முழுக்க சந்தோஷத்தால நிறைஞ்சிருக்கும் போது வார்த்தைக்கு வேலை இருக்காது....பேச வார்த்தையும் இருக்காது...ஆனா என் விஷயத்துல இந்த சந்தோசம் எல்லாம் எனக்கு மட்டும் தானே, சோ இப்போ நான் பேசியே ஆகணும்..இல்லனா அவ போன் கட் பண்ணிட்டு போய்டுவா...அதனால என் சந்தோஷ வெள்ளத்த அப்படியே அடக்கி வச்சிட்டு பேச ஆரம்பிச்சேன்...
"ம்ம்ம்ம், சொல்லு நிந்தியா...மோகன் தான் பேசறேன்"....
"மோகன் நான் பேசறது உனக்கு க்ளியரா கேட்குதா"
(அட லூசு பொண்ணே நீ பேசறது மட்டும் தானே எனக்கும் என் மனசுக்கும் கேட்குது, இது உனக்கு புரியலயா...).
"ம்ம்ம், நீ பேசறது எனக்கு தெளிவா கேட்குது நிந்தியா...சொல்லு மா... என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க...எனிதிங் சீரியஸ்...(உன்ன செல்லம், டியர், அம்மு, புஜ்ஜினு கொஞ்ச தான் ஆச... என்ன பண்றது இப்போதைக்கு டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணனுமே)
"சீரியஸ்லாம் எதுவும் இல்ல, பட் உன்னோட ஹெல்ப் தேவபடுது.....சோ கால் பண்ணேன்...அண்ட் ரியலி சாரி...இந்த நேரத்துல கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணதுக்கு"....
"ஏய், டோன்ட் திங் லைக் திஸ் மா....அப்படிலாம் இல்ல...பர்ஸ்ட் என்ன ஹெல்ப்னு சொல்லுமா....ஐ யம் ரியலி க்ளாட் டு ஹெல்ப் யு..."
"தேங்க்ஸ் மோகன், உனக்கே தெரியும்...எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சு....பட் என் ஹாஸ்டல்ல நெட்வொர்க் ப்ரோப்ளம்..இங்க என்னால ரிசல்ட் பாக்க முடியல....சோ ஐ யம் ஆஸ்கிங் யு..., நீ என்னோட ரிசல்ட் பாத்து சொல்றயா.....என்னோட மெயில் க்கு அனுப்பினா கூட போதும்...ப்ளீஸ் மோகன்..."
"ஏய் டோன்ட் சே ப்ளீஸ், கண்டிப்பா சொல்றேன்...பட் ஐ ஹாவ் சம் ப்ரோப்ளம் இன் மை மெயில்....உனக்கு எந்த ப்ரோப்லமும் இல்லனா நாளைக்கு நானே உன் ரிசல்ட்ட பிரிண்ட் அவுட் எடுத்துட்டு உன்ன நேரா பாத்து குடுத்தறேன்...."
அவ பதில் பேசாம அமைதியா யோசிச்சிட்டு இருந்தா...எனக்கோ திக் திக்னு மனசு அடிக்குது....இந்த வழிய விட்டா அவள நேரா பாக்கற சந்தர்ப்பம் கிடைக்காது...என்ன பண்றது...மூளை வேகமா யோசிக்க ஆரம்பிச்சது...
"நிந்தியா இப்போ நான் உன் மெயில்க்கு அனுப்பினாலும் உன்னால தான் பாக்க முடியாதே, அங்கயும் நெட்வொர்க் ப்ரோப்ளம் தானே...சோ நீ என்ன நேர்ல மீட் பண்ணி உன் ரிசல்ட் பாக்கறது தான் சரியா வரும்...."(எப்படியோ சரியா யோசிச்சு சிக்ஸர் அடிச்சிட்டேன், பட் அவ பதில் பொருத்து தான் நான் அடிச்சது சிக்ஸரா இல்ல நோ பாலானு தெரியும்...ப்ளீஸ் எஸ் சொல்லிடு...)
" யா, யு ஆர் ரைட் மோகன், பட் ஹாஸ்டல்ல மீட் பண்ண முடியாது...சோ நாம நாளைக்கு ஈவ்னிங் மால்ல மீட் பண்ணுவோம்...ஆர் யு ஓகே வித் தட்? "
"டபுள் ஓகே" சொல்லிட்டு அவள எப்போ மீட் பண்ண போறேன்னு காத்திருக்க ஆரம்பிச்சேன்.....
அவ சொன்ன மாதிரி ஈவ்னிங் அவள பாக்க ரெடி ஆனேன்..நீங்க நினைக்கிற மாதிரி ஹீரோ ரேஞ்ச்க்கு மேக் அப்ளாம் பண்ணிக்கிட்டு சும்மா கலக்கலா அவள பாக்க மாலுக்கு கிளம்பினேன்....
பாதி தூரம் போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, முக்கியமான ஒன்ன மறந்துட்டேன்னு...அவ ரிசல்ட் பிரிண்ட் எடுக்கவே மறந்துட்டேன்...மறுபடியும் வீட்டுக்கு போய் பரபரப்பா அந்த ப்ரிண்ட எடுத்துக்கிட்டு அவள பாக்க கொஞ்சம் பயத்தோடே போனேன்...பிகாஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு...அவ ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்பா, பர்ஸ்ட் அட்டம்ப்டே இப்படி சொதப்பிட்டயே மோகன்னு என்னையே நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டுகிட்டு மால்குள்ள போனேன்...மால் புல்லா தேடினதுல இருந்து அவ இன்னும் வரலன்னு தெரிஞ்சிகிட்டு கொஞ்சம் ரிலாக்ஸா வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்...
கொஞ்சம் நேரம் மனசு அமைதியா தான் இருந்தது, அப்புறம் தான் ஒரே படபடப்பா ஆகிடுச்சு...அவ இப்போ வருவாளா மாட்டாளா????....
இதே டென்ஷனோட திரும்பி பாத்தா தேவதை மாதிரி என் முன்னாடி வந்து நின்னா...
"ஹாய் மோகன், தாங்க் யு, எனக்காக இவ்ளோ தூரம் வந்து ஹெல்ப் பண்ணிருகிங்க...தேங்க்ஸ் எ லாட்" ....
"என்ன நிந்தியா விட்டா தேங்க்ஸ் சொல்லிட்டு இப்படியே எஸ்கேப் ஆகிடுவிங்க போல...பர்ஸ்ட் பொறுமையா உங்க மார்க்ஸ் பாருங்கன்னு" சொல்லிட்டு அவளோட ரிசல்ட் ஷீட்ட கொடுத்தேன்....ஒஹ் மை காட், நினச்ச மாதிரியே நல்ல மார்க்ஸ் ஸ்கோர் பண்ணிருக்கேன், ஐ யாம் ரியலி ஹாப்பி மோகன்...ஆமா ,உங்க கைல இருக்கே அது என்ன?"
"இது என்னோட ரிசல்ட்"
"அந்த ஷீட்ட குடுங்க"
குடுத்தேன்...பாத்துட்டு "ஒஹ் காட், சேம் மார்க்ஸ்..எப்படி மோகன்...நம்பவே முடியல....இட்ஸ் கிரேட்..."
"ம்ம்ம், இதுக்காகவே நாம கொண்டாடி ஆகணும்...சேர்ந்து ஒரு கப் காப்பி குடிக்கலாமா?"
எனக்கும் உங்களோட காபி குடிக்க ஆச தான், பட் பிரண்ட்ஸ் கூட வந்துருக்கேன்...இப்போவே டைம் ஆகிடுச்சு..என் அவுட் பாஸ் இன்னும் ஒன் ஹார் தான்..சோ நான் கிளம்பனும்..பட் இன்னொரு நாள் ஒருவேள நாம மீட் பண்ற சான்ஸ் கிடச்சதுனா கண்டிப்பா காபி சாப்டலாம்..ஓகே மோகன்....நொவ் ஐ ஹெவ் டு லீவ்....பாய் மோகன்"
ரொம்ப ஈசியா சொல்லிட்டு போய்ட்டா, ஆனா இப்பவே இவள மீட் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு என்னக்கு தான் தெரியும்.....கொஞ்சம் கூட பீலிங் இல்லாம ஒருவேள சான்ஸ் கிடச்சானு சொல்லிட்டு போறா......இனி சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ அத நானே உருவாக்க வேண்டியது தான்....சோ என்னோட அடுத்த அட்டெம்ப்ட் சரியா இருந்தா நான் நினச்சது எல்லாம் நடக்க ஆரம்பிச்சிடும்....சோ எல்லாமே நல்லதாவே நடக்கும்ங்கற நம்பிக்கைல என்ன திரும்பி கூட பாக்காம நடந்து போன நிந்தியாவையே பார்த்துட்டு என் மனச தேத்திக்க ஆரம்பிச்சேன்....