குழந்தைப் பாடல் ஆகாயம் பார்
நீல நிறத்தில் கூரையாம்
நீக்கம் இல்லா கூரையாம்
ஆக்கம் யாவும் தந்துதவும்
ஆகாயம் பெயர் கொண்டதாம்
வண்ண வண்ண சுட்டி ஒளிகள்
வார்த்து வடித்த வண்ணமாம்
வகை வகையாய் வந்து நின்று
வண்ணக் கண்கள் சிமிட்டுதாம்
வளர்ந்து வளர்ந்து தேயுமாம்
வட்ட நிலவும் அங்கே பார்
வசந்தம்உள்ள குளிர் நிலவாய்
வெளிச்சம் தந்து வாழ்த்துது
மென்மையான காற்றையும்
மேன்மையான குணத்தையும்
மேனியெங்கும் படர விட்டு
மேதினியில் நாம் வாழ
மெல்ல மெல்ல வீசும் காற்றை
மெத்தனமாய் தந்துதவும்
மேக வள்ளல் ஆகாயமாய்
தெரிகிறது தொல்லையின்றி
நீரை எல்லாம் கொண்டு சென்று
நீர்தேக்கம் மேகம் என்றும்
நினைவெல்லாம் தருகிறது
இருண்டு உருளும் மேகங்களால்
இன்று வரும் நாளை வரும்
நல்ல மழை என்று இன்பத்துடன் நாம்
உயரத்திலே கூரையம்மா
உலகத்தையே காக்குதம்மா
உனக்கு என்றும் எனக்கு என்றும்
உள்ளதெல்லாம் உலகுகத்திற்கே
ஆகாயம் பார் ஆகாயமாம்
ஆனந்தமாய் அழைத்திடுவோம்