என் கண்களை திறந்தேன்

அப்பா என்ற பதவி கிடைத்த்த பெருமிதத்துடன்
பளபளத்தன அவ்விரு கண்கள்........
நான் பிறக்கும்போது அழுத அம்மா
என் முகம் பார்த்து பெருமூச்சு விட்டாள்
சிரித்தன அவ்விரு கண்கள்.......
அது வரை ஏகமாய் குதித்து கொண்டிருந்த
அக்கா திடீரென மௌனமானாள்
அவ்விரு கண்கள் வியந்தன......
கதை சொல்லவும் காதை திருகவும்
தயாரானால் பாட்டி
அவ்விரு கண்கள் குதுகளித்தன.......
ஓரமாய் நின்று ஒரு பேச்சுமின்றி
என் சுட்டு விரல் நுனியையும் உதட்டு சிரிப்பையும்
பார்த்தபடி நின்றிருந்தார் தாத்தா
அவ்விரு கண்கள் எதையோ தேடின.......
நான்
பன்னிரு கண்களும் என்னை உற்றுநோக்க
இத்தனை பாசமா இத்தனை அன்பா
என் உயிர் துடித்தது உதடு படபடத்தது
கடவுளே உனக்கு நன்றி என கூற வாயெடுத்தேன்
"ஓ" என அலறல் தான் வந்தது
.......................
கடைசி இரு கண்களுக்கு சொந்தமானவர்
கூறினார்
"பாப்பா அழுது விட்டது , இனி கவலை இல்லை"
...................................
ஈசனுக்கு நன்றி! ..... மருந்தீசனுக்கு மற்று மொரு நன்றி !
------------------------------------------------------------------------சுபா சுந்தர்

எழுதியவர் : சுபாசுந்தர் (13-Apr-16, 11:58 am)
பார்வை : 3725

மேலே