உன் கனவு

கனவு காண். உன் கனவு மெய்ப்படும்.
உன் கனவு உறுதியாக உன் வசம் ஆகும்.
உன் கனவுகளை பற்றிக்கொள்
அது ஒரு நாள் உன்னை பற்றும்.

உன் கனவு
உன்னை துணிந்து நிற்க செய்யும்
எப்போதும் விழித்திருக்க செய்யும்.
உன்னை நெறிப்படுத்தும்
முயற்சிகளை முறைப்படுத்தும்
உன்னை நேர்மையாய் இருக்க செய்யும்
உண்மையை பார்க்க செய்யும்.
உன் லட்சிய இலக்கை காட்டும்
அதை அடையும் வழியையும் காட்டும்.
உன்னால் முடியும் எனும் நம்பிக்கை தரும்
எவராலும் தடுக்க முடியாதென்னும் துணிவை தரும்
வானம் வசப்படும். பூமி கைவரும்
கோள்கள் அனைத்தும் உன் சொற்படி கேட்கும்.

துணிந்து நில். கனவு காண்
துணிந்தவனுக்கே இறைவனும் துணை நிற்பார்.
உன் கனவு உறுதியாக உன் வசம் ஆகும்.

எழுதியவர் : சுபாசுந்தர் (13-Apr-16, 11:54 am)
Tanglish : un kanavu
பார்வை : 495

மேலே