வழிவிடு

நிசப்தமாய், அமைதியாய் ஆழ்ந்து கிடந்த
என் மனக் குளத்தில்
காதல் கல்லெறிந்துக் கலைத்துவிட்டாய்.

உன்னால் உசுப்பப்பெற்ற நினைவுகள்
ஓயாமல் வதைத்து, அலை பாய்ந்து நிற்க
அசையக்கூட இயலவில்லை.

முழுமையாய் என்னை துறந்துவிட்டாய்,
நினைவு நிலை மாறவில்லை.
மறக்கக் கற்றுக்கொடு, இல்லை
மரிக்க வழிவிடு.

எழுதியவர் : jujuma (18-Jun-11, 11:54 am)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 396

மேலே