வாக்குகளின் பெருமை

செய்யக் கூடுமானதை
சொல்லி விடு
சொல்லிய வார்த்தையைப்
பின் வாங்காதே

உன்னை நீயே நம்பிவிடு
நம்பிக்கையில் உன் செயல்
நகர்ந்து செல்லும்
நாணயமும் நம்பிக்கையும் உன் முன்னே

பின் வாங்க நினையாதே
நீ கோழையாகி விடுவாய்
வார்த்தை பிறழாதே
சீரிய வழியில் நேரிய பார்வையில் செல்

உன்னைப் பின்பற்ற உன் பின்னால்
உலகமே திரண்டு வரும்
உன்பெயரும் உத்தமனாம்
உயந்ததோர் நிலலையில் உன்னையே கொள்

வாக்கு வடிவில் உன் உருவம்
நீங்கா இடத்தைப் பெற்று விடும்
மக்கள் மனதில் நிலைத்து நிற்க
மலையாய் என்றும் உயர்ந்து நில்

தன்னலம் வருவது நம்முள்ளே
பிறர்நலம் காண்பது அவர்க்குள்ளே
உனக்கென்று வாழ்வதை மறுத்து விடு
மக்களுக்காக மக்களுக்காக வாழ்ந்து விடு

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Apr-16, 2:09 pm)
பார்வை : 110

மேலே