குடிகாரன் பேச்சு

வெறுமையே
என் ஆதிகால‌
வேர்களை
தோண்டியெடு!!

எனதான்மாவின்
துகள்களில்
அச்சடிக்கப்பட்ட‌
அவளை

காதல் நிமிஷத்தில்
சினேகிதங்களை
நினைவுகொள்ளாத‌
சிந்தையை

காட்சிகள்
புலரா இரவில்
பிச்சைக்காரனிடம்
சில்லறை பெற்றதை

கண்ணீருக்கென்றே
காதல் வளர்த்ததை

மின்சாரக்கம்பியில்
இறந்த பறவைக்கு
ஆத்மசாந்திக்கென‌
பிரார்த்தித்தை


யாரோ ஒருத்தியை
இது அதுவாகத்தானிருக்கும்
எண்ணிய‌
முட்டாள்தனத்தை

தலமை வாத்தியாரை
மனதினுள்
திட்டிய சுகத்தை

குழந்தையின்
பஞ்சுமிட்டாய்க்கு
கும்பிட்ட பொழுதை

அம்மாவின்
திட்டலுக்கென‌
குற்றம்செய்த‌
குதூகலத்தை

இறுதியில்!!

இன்னும்
காதலிப்பதாய்
உணர்த்திய‌
காதலியை....

புத்தாண்டின்
முன்னைய‌
இராவில்
மதுபாட்டில்களில்
நிறைந்திருக்கும்
வெறுமையே!!

என் ஆதிகால‌
வேர்களை
தோண்டியெடுத்து
எனை அழவை

குடியில்
இறந்த நன்பணை
மறந்தும்கூட‌
மறுபரீசீலனை
செய்யாதே
வெறுமையே,....

எழுதியவர் : புலவூரான் ரிஷி (13-Apr-16, 10:17 pm)
பார்வை : 137

மேலே