சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா
*************************

சித்திரைத்திருழா...

சுவற்றில் வரையப்பட்ட சித்திரம் போல்...
சுவையான ஒரு விழா...!

சூரியனே உன்,
இயக்கத்தை மையப்படுத்தி கணித்த...
தமிழர் காலக்கணிப்பில்...

உன் வருகை...
சுட்டெரிக்கும் வெப்பமாய்...
அதிகம்,
எங்கள் பகுதியில் படுவதால் என்னவோ...

உன்மேல் உள்ள மதிப்பின் காரணமாய்...
இம்மாதத்தை ஆண்டின்
முதல் மாதமாய் வைத்தனரோ...!

பழந்தமிழர்...
அறிவும், அறிவியல் சார்ந்த விசயத்தில்...
கைதேர்ந்தவர்கள்...
என்பதில் ஐயமில்லை...

சுட்டெரிக்கும் கோடைவெயிலில்...
சுற்றியிருக்கும் சொந்தபந்தங்கள்...
சேர்ந்தாலே மனதிற்கு குளிர்ச்சிதான்...

அப்படி சேர்வதற்காக என்னவோ...
இம்மாதம் முழுவதும்...
தனித்தனியே...
ஒவ்வொரு ஊர்களிலும்...
ஆங்காங்கே நடக்கிறது...
சித்திரைத்திருவிழா...!

அதில்,
கோடை வெப்பத்தில் வரும்
அம்மையை தடுக்க...
மஞ்சள் கலந்த தண்ணீரை...
ஊற்றி விளையாடும் விழா...!!

அறுவடை முடிந்த மூன்றுமாத்தில்...
காயப்போட்ட நிலப்பகுதியை...
மீண்டும் குளிர்விப்போம் என்ற
துள்ளலுக்கு ஊன்றுகோலாய்
இருக்கும் விழா...!!!

இவ்விழா...
காலப்போக்கில் மக்களின்
முன்னேற்றம் என்ற மாற்றத்தால்...

ஏன் கொண்டாடுகிறோம்...
எதற்காக கொண்டாடுகிறோம்...
என்று...

தெரியாமல் போகிறது...!

தெரிந்து கொண்டாடினால்...

சித்திரை திருவிழா...
உண்மையில் பல
விசித்திரங்கள் நிறைந்த விழாவாக
இருக்கும்...!!!

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (13-Apr-16, 9:10 pm)
பார்வை : 291

மேலே