அறுசுவை வாழ்த்து

இளவேனிற் காலத் தென்றலில் தவழ்ந்து
=இதயங்கள் தேடிடும் இன்பமாய் கமழ்ந்து
வளமான தாக வருகிற துர்முகி
=வருசம்எம் வாழ்வில் வசந்தமும் தந்து
புளகாங்கித கொள்ள பொழிகிற கொடையில்
=புவனத்து வயல்வெளி பச்சையும் தரித்து
அளவற்ற விளைச்சல் அறுவடை யாகி
==அனைவர்க்கும் கிட்ட அறுசுவை வாழ்த்து.!

**தோழமைகள் அனைவருக்கும் இதயம் கனிந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Apr-16, 2:46 am)
Tanglish : arusuvai vaazthu
பார்வை : 102

மேலே