என்னவளே

சின்ன சின்ன மழை துளியாய்- என்
காதல் குளத்தை கலங்க வைத்தாய்
மலரை சுற்றும் வண்டு அதுவாய்= உன்
மலரடி பாதம் தொழ வைத்தாய்!!!!
முத்துப் பல் சிரிப்பு காட்டி என்னை
காதல் கடலில் மூழ்கடித்தாய்
தட்டி தட்டி அழகு செய்து என்னை
மானிட பதுமை ஆக்கிவிட்டாய்
உதட்டு சிரிப்பு காட்டி என்னை
உளற வைத்தாய் -உந்தன்
கார்மேக குழல் காட்டி சிலிர்க்க வைத்தாய்
காத்திருப்பின் வேதனையை புரிய வைத்தாய் =உன்னை
காண தவம் கிடக்க வைத்தாய் -உன்
திருமணத்தின் முதல் அழைப்பையும்
என்னக்கே வைத்தாய் - என் இதயமே
உயிரோடு எனகேனடி நெருப்பை வைத்தாய்!!!!

எழுதியவர் : க. குருவரன் (14-Apr-16, 11:10 pm)
Tanglish : ennavale
பார்வை : 773

மேலே