நீ யாரென்று எனக்கு தெரியும்

இமைகள் மூடி இருக்கும் போதும்
இதய கூட்டுகுள்ளே துடித்து இருப்பாய்
சலனமில்லா தென்றல் போலே
சத்தமில்லாமல் தழுவி செல்வாய்
பூங்குயில் கூவிடும் நேரத்தில் என்
காதருகே வந்து பேசிடுவாய்
கண்ணீர் சிந்தும் நேரத்திலும்
சிறு பிள்ளை போலே சிரிக்க செய்வாய்
மறக்க நினைக்கும் நேரத்திலும் உன்னை
நினைக்க செய்து சிரித்திடுவாய்
வாழும் நிலையில் என்னை வைத்து
வாழவும் விடாமல் கொன்றிடுவாய்
நீ யாரென்று எனக்கு தெரியும்- உன்
நினைவால் வாடவைக்கும் என் நிழலடி நீ

எழுதியவர் : க.GURUVARAN (15-Apr-16, 6:29 pm)
சேர்த்தது : GURUVARAN
பார்வை : 706

மேலே