என்னவளுக்கான கவிதைகள் பகுதி -3
மொழியில்லை ஒரு வழியில்லை
மௌனம் என்பது பதிலில்லை
உனக்கேன் இன்னும் புரியவில்லை
வரமா சாபமா தெரியவில்லை???
சிறு சிறு பொய்கள்
சிலிர்த்திடும் பொழுதுகள்
உன்னால் நடக்கையில்
மனம் தினம் ஏங்கிடும்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மாறிடும் நாள் தூரமில்லை
நம் காதலை பொறுத்தவரை