அவசியம் தொிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படி திதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது

*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.

*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி, மாடு ஆகியவை கட்டியிருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.

*தன் தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.

*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.

*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

* மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.


1) குப்பைகளை எறியாதீர்கள் சாலைகள்/தெருக்களில்.

2)எச்சில் துப்பாதீர்கள் சாலைகள்/சுவர்கள் மீது.

3)சுவர்கள்/பணத்தாள்கள் மீது எழுதாதீர்கள்.

4)மற்றவர்களை தவறாகவும்/இழிவாகவும் நடத்தாதீர்கள்.

5)நீர்/ மின்சாரம் சேமியிங்கள்.

6)மரம் நடுவீர்.

7)சாலை விதிகளை பின்பற்றுங்கள்.

8)பெற்றோர்களையும், முதியவர்களையும் எப்பொழுதும் மரியாதையுடன் நடத்துங்கள், அவர்களின் ஆசீர்வாதங்களை பொற்றுக் கொள்ளுங்கள்.

9)பெண்களை மரியாதையுடன் நடத்துங்கள்.

10) ஆம்பலன்ஸ் போன்ற அவசர வாகனகளுக்கு வழிவிடுங்கள். நாம் தான் மாற வேண்டும் நாடு அல்ல. நாம் மாறினால் நாடு தானாகவே மாறிவிடும். நம்முடைய வருங்கால சந்ததிகள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலில் வாழ வேண்டுமானால் இவைகளை உறுதியுடன் அநுதினம் கடைபிடியிங்கள். எந்த தனிப்பட்ட தலைவர்களோ,தனிமனிதனோ, நாட்டை மாற்ற முடியாது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (17-Apr-16, 10:22 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

மேலே