தமிழ் இலக்கியம்
அமுதாக இனிக்கும் நம் தாய் தமிழ் மொழி
இரவல் மொழியில் பெருமை பேசி
இழந்த உண்மை இன்பம் கோடி கோடி
இரைந்து கத்தும் காகத்தை போன்று
இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே
தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது
தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை
தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை
தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம்
வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு
வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ?
வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே
வெட்டிப் பேசும் ஆங்கிலத்தில் சுவையில்லையே
அம்மா ஊட்டும் அமுதின் சுவை வருமோ
அன்போடு தரும் பாசத்திற்கு விலையுண்டோ
அமுதாக இனிக்கும் நம் தாய் மொழியே
அரவணைத்து வாழ்வோம் நாம் நலம் பெறவே
— மீரா குகன்