வேண்டாம் விவாகரத்து

இன்பமோ துன்பமோ சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை
தவறு நான் செய்திருக்கலாம்
பிரிவு அதற்கு ஒரு முடிவல்ல கண்ணே!

திரியும் எண்ணெயும் சேர்ந்து எரிந்தால் தான்
சுடர் என்ற வாழ்வும் பிரகாசிக்கும்
சினம்கொண்டிருந்தால் கல்லும் சிற்பமாகுமோ?

மணங்கொண்ட என்னை
மறந்து செல்ல நினைத்தாயே கண்ணே!
உன்னை மணமுடித்த என் மனதுடைத்து
மணமுறிக்க மனு கொடுத்துவிட்டாயே!

நீர் நெருப்பை அணைத்தால் தான்
அங்கே அமைதி நிலவும்
நீ என்னை அணைத்தால் தான்
என் வாழ்வும் மலரும்!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (18-Apr-16, 8:38 am)
பார்வை : 68

மேலே