தற்பெருமை...
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை நான்,
மிகவும் நேசிக்கிறேன்...
நேசிக்க யாருமற்றதால்...
என்னை நான்,
அதிகமாகவே கொண்டாடுகிறறேன்,
கொண்டாட யாருமற்றதால்...
தனிமையே சிறந்ததென வாதிடுகிறேன்,
விதிக்கப்பட்டதால்...
எப்பொழுதும்,
நகைச்சுவை மேலிடப் பேசுகிறேன்...
துயரம் சூழ்ந்திருப்பதால்...
மாறாக...
என்னை நான்,
வெறுப்பதுமில்லை
பொறாமை கொள்வதுமில்லை...
இவற்றிற்கென சிலர் எப்பொழுதும்-
இருப்பதால்....