தேவைக்கும் வரவுக்குமிடையே...


கோடை காலத்தில்...
கொதிக்கும் தரையில்...
நீர் தெளித்தும்...
தேவைகளின் பட்டியல் போல்-
வெப்பத்தின் வீச்சு தொடர்ந்தது...

தேய்பிறை நிலவினைப் போல்-
வரவுகளின் வழித்தடங்கள் யாவும்,
சுருங்கிக் கொண்டிருந்தாலும்,
என்றெனும் வளர்பிறையாய் வளரும் - என்ற,
ஒற்றை நம்பிக்கையில்...

குளிர் குன்றிய நிலவொளியில்,
கடந்து செல்லும் இரவில்,
வெப்பம் தணியாத தரையில்,
உறங்கிடப்பழகி... வெகுநாளாயிற்று....

எழுதியவர் : ரமண பாரதி (18-Jun-11, 8:10 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 321

மேலே