மழலை மனம்...

எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறேன்...
எல்லாரையும் மன்னிக்க நினைக்கிறேன்...
அறுப்பட்ட நூலிலிட்ட-
முடிச்சின் உறுத்தல் போல,
காயத்தின் காயத்தின்-
தழும்பின் வடுவினைப் போல,
மன்னித்தாலும்,
மறக்க மறுக்கிறது...
மனம் புனைந்த மானம்...
மானம் மறைக்கும் மனம்,
மதலையின் மனதை-
தக்கவைப்பது...
எளிதா என்ன?