நெஞ்சத் தோட்டத்தில் முள்ளை விதைக்கிறாள் ஏனோ
துயில்கலைக்கிறாள் சிலநாள்
கனவுத்திரை விரிக்கிறாள் சிலநாள்
மலர்விரியும் தோட்டத்தில் மாலை வா என்றால்
வர மறுக்கிறாள் ஏனோ ?
நேச வாசலை திறந்துவிட்டு
நெஞ்சில் வலி கொடுக்கிறாள் நித்திரை கெடுக்கிறாள்
மோசம் செய்கிறாள் கல் நெஞ்சக்காரி !
கண்கள் தோட்டத்தில் காதலாய் விரிந்தவள்
நெஞ்சத் தோட்டத்தில் முள்ளை விதைக்கிறாள் ஏனோ ?
----கவின் சாரலன்