உன்னை பிரிவதென்றால்
உன் காதல் சொல்லடி
என்னை கவனம் கொள்ளடி
என் கவிதை நீயடி
வேண்டும் உன் தாய்மடி
உன் கண்கள் பேசும்
வார்தையாவும் கவிதையாகுமே
எழுதாத கவிதையாகுமே
என் தனிமை தொலைக்கவே
மறதி என்பது மனித குணமாம்
உனக்கும் அவைகள் எளிதில் வரலாம்
நம் காதல் அதனால் பிரிவை தொடலாம்
உன்னை சேர நான் உயிரை விடலாம்
உன்னை பிரிவதென்றால் - என்
நெஞ்சம் தாங்காதம்மா ....
கண்கள் தூங்காதம்மா
உயிர் காதலுக்கு விலை ஏதம்மா