கலைக்க வேண்டாம்

அந்த இளவயதுள் புகும் கனவில்
இந்தக் கிழவய துடனே இருந்தேன்
காணும் பழய முகம் யாவும்
அன்று போல் பூத்திருக்க
அன்று சொல்ல முடியா ஸ்பரிசங்கள்
இன்று சொல்ல முடிந்ததில் வியப்பு
வயதுகளுக் கப்பால் ஊடிச் சென்ற
நாட்கள் பறித்த நாட்கள்
புரியாத புதிர் யாதெனில்
என் உருவம் மறைத்த பருவம்
அவர் ஊகம் செய்த தெவ்விதம்
என் கனவில் அவர்களா..?
அவர் கனவில் நானா..?
இன்னும் கொஞ்சம் போகட்டும்
கலைக்க வேண்டாம்.....

----- முரளி

எழுதியவர் : முரளி (19-Apr-16, 8:51 pm)
Tanglish : kalykka ventaam
பார்வை : 381

மேலே