நான் அப்பவாகும் தருணம்

கை தொட்டு பார்த்துச் சென்றேன்
காலை பணிக்கு நானும் விரைந்தேன்
சூரியன் தலை தட்டும் நேரத்தில்
சிட்டுக் குருவி சிணுங்க
கைப்பேசி மணியும் ஒழிக்க
எட்டிப் பார்த்து எடுத்தேன்
மனைவியின் எண்ணென்றும் அறிந்தேன்
தொட்டுப் பேசி கேட்டேன்
இல்வரவேண்டுமென்று சொன்னால்
தொடாமல் பேசி வைத்தால்
விரைந்து சென்றேன் வீட்டில்
அமைதி தவழும் மௌனம்
தேடி தேடி அலைந்தேன்
இல்லாளை இறுதியாய் அடைந்தேன்
வெக்கித் தவழும் வெட்கம் அது
சொக்கித் தவழும் சொர்க்கம்
(மீண்டும் ஒருமுறை)
வெக்கித் தவழும் வெட்கம் அது
சொக்கித் தவழும் சொர்க்கம்
முகம் மலர முகம் வைத்தேன் அங்கு
அகம் மலர அகம் சேர்த்தேன்
கைக்கோர்த்து கை சேர்த்தால்
என் கண்ணை உற்றுப் பார்த்தால்
கண்களால் கேட்டேன் கேள்வியை
என் கை பிடித்து அவள்
வயிற்றில் வைத்து சொன்னால் பதிலை
-
-
-
டேய் மாம்ஸ் நீ அப்பாவாக போரடா
-
சொன்ன ஒரு சொல்லில் இந்த
மண்ணை விட்டு அவள் பாதம்
என் ஐந்தடிக்கும் மேல்
------------------------------------------------
written by :
ராஜ்குமார் ரா

எழுதியவர் : ராஜ்குமார் ரா (19-Apr-16, 9:06 pm)
பார்வை : 1943

மேலே