என்னை கவர்ந்தவளே

கண்கள் பேசும் மொழிகொண்டு
என்னை கவர்ந்தவளே ...
தாய்மொழியாய் மௌனம் கொண்டு
அணுஅணுவாய் வதைப்பது ஏன்?

உன்னிடம் பேசிட மொழிதேடி - தினமும்
தொலைந்து நான் கிடைத்தேன் ...
நிரந்திர தீர்வு ஏதுமின்றி ...
ஆவி நிலையாய் நான் அலைந்தேன்

மரணம் என்று தனியே ஒன்று
எனக்கு நிகழ தேவையில்லை
எனக்கு எமன் தேவையில்லை
காதலெனும் பெயரில் நீ இருக்க

எழுதியவர் : ருத்ரன் (19-Apr-16, 10:28 pm)
பார்வை : 265

மேலே