எப்படிப்பட்ட காதல் எப்படிப்பட்ட வாழ்க்கை
மெட்டி போடும்முன்
தொட்டில் போடுவதற்கு
கட்டில் தேடுவதல்ல
காதல்.
பட்டுக்கன்னம்
தொட்டுவிடும் தூரமிருந்தும்
எட்டி நின்று ஆண்மையில்
இறுமாப்பு காட்டுவதே
காதல்.!
கைக்கொட்டி பிறர்
சிரிக்க வாழ்வதல்ல
காதலும், வாழ்க்கையும்..
இவங்க மாதிரி யாருன்னு
கேட்கத்தோணனும்
அது தாண்டா
காதலும்
வாழ்க்கையும்..!!