சாயந்திர கோபுரம்

சாயந் திரகோ புரமிவள் சாத்திரங்கள்
கோலமிடும் நீலவிழி யில்

நீலவிழி சொல்லிடும் சாத்திரம் தானென்ன
அந்தியின் அர்த்தங்க ளோ

அந்தியின் அர்த்த மனைத்துமே காதலின்
சந்திரோத யங்கள்தா னோ

சந்திரோத யம்தன்னில் தோன்றிடும் பிம்பம்
எழில்தேவ தையவ ளோ

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-16, 4:27 pm)
பார்வை : 76

மேலே