மௌனப் புயலே
மௌனப் புயலே....
ஆழ்மனதில் மையம் கொண்டு
இதயம் நோக்கி நகர்ந்தாய்....
வீரியமாய் சுழன்று அடித்து
உணர்வுகளாய் கொட்டித் தீர்த்தாய்....
இன்று...
லேசான விம்மலுடன்
கரைகடந்தாய் மௌனமாய்...
மழை ஓய்ந்த பின்னும்...
தூவானமாய் தூவும் நீர்த் திவலையில் நனையும்
மரக்கிளை அடியில்
ஒதுங்கிய உயிராய்.....
மனதில் புதைந்த நினைவுகளோடு நான்.......
கவிதாயினி அமுதா பொற்கொடி