சித்திரை நிலவு

சித்திரை நிலவால்
சிந்தனை சிதறல்கள்

நித்திரையில் நிதம்
நீங்கா நினைவுகள்

மங்கையின் ஸ்பரிசம்
மனமதை வாட்ட

கங்கையை போலே
வற்றா உணர்வுகள்

மென்மையின் செறிவாய்
பெண்மையின் நெருக்கம்

இனிமையின் உச்சமாய்
சித்திரை நிலவொளி

மனந்திறந்து வழிவிடு
மகிழுமே என் ஜீவன்

தொலைந்தேன் நான்
தேடினேன் உன்னில்

நெகிழ்கிறேன் அன்பே
நெஞ்செல்லாம் நீ !!!

யாசகம் கேட்கவும்
யோசிக்க மனமில்லை

இதயம் நிறை அன்பை
இரையாக தேடியே

சாத்தியப்படுமோ ....
சத்தியம் தெரியவில்லை ..

எழுதியவர் : வீ.ஆர்.கே. (20-Apr-16, 3:43 pm)
Tanglish : sithirai nilavu
பார்வை : 465

மேலே