கே இனியவனின் 1000 வது கஸல்
நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்
^
" முள்ளில் மலரும் பூக்கள் "
கஸல் கவிதை